search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 35 பேர் மீது வழக்கு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள்.

    பொங்கல் பண்டிகையையடுத்து பல்வேறு இடங்களில் திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மாவட்டம் முழுவதும் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

    இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் திங்கள் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது பாட்டில் வைத்திருந்த பேச்சிப்பாறை சேர்ந்த செல்வராஜ் என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குலசேகரம் போலீசார் குலசேகரம் அரசமூடு பகுதியில்ரோந்து சென்றபோது மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததாக நாகராஜன் என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    இதேபோல் அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி கோட்டாறு தக்கலை குலச்சல் பகுதிகளிலும் அனுமதியின்றி மதுபாட்டில் வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். 

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் திருட்டு மது விற்பனை செய்வதாக 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    நாககோடு பகுதியில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஐயப்பன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளுவர் தினமான இன்றும் முழு ஊரங்கான நாளையும் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
    Next Story
    ×