search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறிக்கோழிகள்
    X
    கறிக்கோழிகள்

    நாமக்கல் பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கம்

    நாளை முழு ஊரடங்கு என்பதால் நாளையும் எந்த கடைகளும் திறக்க முடியாது என்பதால் கறிக்கோழி கடை உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தவித்து வருகிறார்கள்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பிராய்லர் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கும் நாள்தோறும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து மேலும் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை நம்பி பல லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.

    கறிக்கோழிக்கான விலையை பல்லடத்தில் செயல்படும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு (பிசிசி) நிர்ணயம் செய்கிறது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 180 ரூபாய்க்கும், உரித்த கோழி 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வரும் கரிநாளில் அதிக அளவில் கறிக்கோழி விற்பனை நடைபெறும். இதற்காக முன்கூட்டியே அதிக அளவில் கறிக்கோழியை வியாபாரிகள் குவித்து வைத்தனர். இந்த நிலையில் கரிநாளான நாளை முழு ஊரடங்கு என்பதால் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கறிக்கோழி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே இன்று அதிகாலையில் ஒரு சில கறிக்கோழி கடைகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் திறந்து இருந்தனர். ஆனால் மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம் என்பதால் கறிக்கோழிக்கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. இதனால் கடைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாளை முழு ஊரடங்கு என்பதால் நாளையும் எந்த கடைகளும் திறக்க முடியாது என்பதால் கறிக்கோழி கடை உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தவித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே இரவு நேர ஊரடங்கால் கறிக்கோழிகள் மற்றும் முட்டைகள் அதிக அளவில் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ள நிலையில் தற்போது பொங்கல் வியாபாரமும் முழுவதும் முடங்கி உள்ளதால் கறிக்கோழி தொழிலை நம்பி உள்ளவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து கறிக்கோழி வியாபாரிகள் கூறியதாவது:-

    நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று கறிக்கோழிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று நினைத்து கறிக்கோழிகளை வாங்கி குவித்து வைத்திருந்தோம், ஆனால் வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது. இதனால் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது. மேலும் கறிக்கோழிகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×