search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புகையில்லா போகி கொண்டாடுவோம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவோம் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை  எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய் களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

     வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

    எனவே, குமரி மாவட்டத் தில் வரும் 13.01.2022 (வியா ழக்கிழமை) அன்று அனுசரிக் கப்படும். இப்போகித் திருநாளில், நம்வாழ்வும், வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளை யும், செயல் திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மறறும் பொ£ங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    எனவே, போகிப்பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புகையில்லா போகி கொண் டாடுவோம். சுற்றுச்சூழலை பேணிக்காப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×