search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை நகை கடையில் 14 மோதிரங்கள் திருடிய வாலிபர்கள்

    நகை வாங்குவது போல நடித்து மோதிரங்களை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் ஒரு தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ளவர்கள் நேற்று கடையில் உள்ள நகைகள் இருப்பு தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் இருந்து குழந்தைகள் அணியக்கூடிய 14 மோதிரங்கள் மாயமாகி இருந்தது. காணமால் போன நகை 14 மோதிரங்கள் 8 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து நகை கடையின் மேலாளர் சம்பவம் குறித்து காட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக கடைக்கு சென்ற போலீசார் கடையில் உள்ள ஊழியர்கள் உள்பட பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு, அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நகை வாங்குவதற்காக உள்ளே செல்கின்றனர். 

    பின்னர் அங்குள்ளவர்களிடம் நகை வாங்குவது போல் பேச்சு கொடுத்தபடியே கடையில் இருக்ககூடிய குழந்தைகள் அணியக்கூடிய 14 மோதிரங்களை திருடி பாக்கெட்டில் போட்டு கொள்வதும், பின்னர் அங்கிருந்து எதுவும் தெரியாதது போல் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றிய காட்டூர் போலீசார் நகை திருடிய 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×