search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
    X
    ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னை செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    பொங்கல் பண்டிகையையொட்டி கோவை இருந்து மயிலாடுதுறை மற்றும் நாகர்கோவில் செல்லும் எக்பிரஸ் -விரைவு ரெயில்களில் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது
    கோவை:

    பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக கோவை  இருந்து  மயிலாடுதுறை மற்றும் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் - விரைவு ரெயில்களில் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பொங்கல் பண்டிகையை யொட்டி பயணிகள் வசதிக்காக நாளை (12-ந்தேதி) மற்றும்  13-ந்தேதி கோவையில் இருந்து புறப்படும் கோவை -நாகர்கோவில் இரவு நேர விரைவு ரெயில் (22668) மற்றும் 13, 14-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் இரவு நேர விரைவு ரெயில் (22667) ஆகியவற்றில் இரண்டு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் கோவை ஜனசதாப்தி (12084) விரைவு ரெயில் நாளை மற்றும்  13-ந்தேதி இயக்கப்படுகிறது. இதேபோன்று மயிலாடு துறையில் இருந்து கோவை வரும் ஜனசதாப்தி (12083) விரைவு ரெயில் 13 மற்றும் 14-ந்தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் இரண்டு 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது

    சேலம் - சென்னை எழும்பூர்(22154) மற்றும் சென்னை எழும்பூர்-சேலம் (22153) விரைவு ரெயில்களில் 16 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×