search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு காட்சி.
    X
    கோப்பு காட்சி.

    நாகர்கோவிலில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா

    நாகர்கோவிலில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 200-ஐ கடந்து உள்ளது.

    இந்த நிலையில் இன்றும் 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    நாகர்கோவில் மாநகரில் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 50க்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியில் மாநக ராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணி யில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 22 போலீசாரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் நகரில் உள்ள வங்கி ஊழியர்களும் தற்பொழுது பாதிப்புக்கு உள் ளாகி வருகிறார்கள்.

    மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை மற்றும் பொதுப் பணித்துறை சாலையில் உள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட் டதை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த வங்கிகளுக்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர். 

    பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களில் சளி மாதிரிகளை பரிசோத னைக்காக எடுத்துள்ளனர்.

    மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளிலும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளிலும் சுகா தாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

    காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற் றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். 

    குமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். கடந்த 45 நாட்களில் வெளி நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் குமரி மாவட்டத்திற்கு வந் துள்ளனர்.அவர்களை சுகா தாரத்துறை அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள். 

    3-வது அலை கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அமைச்சர் மனோ தங்கராஜ் கலெக்டர் அரவிந்த் ஆகியோர் டாக்டர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.  மாவட்டத்தில் தேவையான அளவு படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைக்குமாறு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத் தும்மாறும் அறிவு றுத்தியுள்ளனர்.
    Next Story
    ×