search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உருண்டை வெல்லத்தை உலர்வதற்காகஅடுக்கி வைத்திருந்த போது எடுத்த படம்.
    X
    உருண்டை வெல்லத்தை உலர்வதற்காகஅடுக்கி வைத்திருந்த போது எடுத்த படம்.

    கபிலர்மலை பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபிலர்மலை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்புகளை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்புகளை டன் ஒன்றுக்கு ரூ 2,700 வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகளை சாறுபிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை என தயார் செய்கின்றனர்.தாயார் செய்த வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். 

    பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஏல மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

     வாங்கிய வெல்ல சிப்பங்களை தமிழ்நாட்டில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், , திண்டுக்கல், மதுரை பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கபிலர்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் வெல்லங்களை தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெல்லத்தின் விலை உயர்ந்துவருகிறது.

     வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வெல்லங்களை போட்டிபோட்டு எடுத்து விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.   வெல்லம் மற்றும் கரும்பு விலை உயர்வால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×