search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்ட காட்சி.
    X
    வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்ட காட்சி.

    வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

    பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை கரூர் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான உஸ்வத்துன் ஹசானா மாமாஞ்சி அப்துல் லத்தீப் பெண்கள் கல்லூரி, புகழூர் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கைகான போதிய இடவசதி உள்ளதா? தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டுகளில், 35 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் 15,237 ஆண் வாக்காளர்களும், 15,996 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 31,234 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதேபோல் புகழூர் நகராட்சியில் 24 வார்டுகளில், 32 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், 12,357 ஆண் வாக்காளர்களும், 13,796 பெண்வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 26,154 வாக்காளர்கள் உள்ளனர்.

    முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி மற்றும் புகழூர் நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல்களை சம்பந்தப்பட்ட நகராட்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லீலாகுமார், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், புகழூர் நகராட்சி ஆணையர் கனிராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×