search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி (கோப்பு படம்)
    X
    ரேசன் அரிசி (கோப்பு படம்)

    ஜோலார்பேட்டை, வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 3½ டன் ரேசன் அரிசி பறிமுதல்

    ஜோலார்பேட்டை, வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 3½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் அவ்வழியாக வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    அப்போது ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் சோதனை செய்தபோது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிகளின் இருக்கையின் அடியில் சிறு சிறு மூட்டைகளில் 20 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சிறப்பு அதிரடி குழு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, பச்சூர், சோமநாயக்கன்பட்டி பகுதியிலும் மற்றும் ரெயில் நிலையங்கள் பகுதிகளில் வாகனதணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

    அப்போது திருப்பத்தூரிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து மர்மநபர்கள் மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர். அவற்றை போலீசார் சோதனை செய்த போது அதில் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×