என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்தார்
  தஞ்சாவூர்:

  தஞ்சை நடராஜன் நகர் மாதாகோட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் அனுஸ்ரீ (வயது19). இவர் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 
  2-ம் ஆண்டு படித்து வந்தார். 

  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அப்போதிலிருந்து அவர் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். திடீரென அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு அனுஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   
  இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவக்கல்லூரி தேர்வுக்குப் பயந்து அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×