search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    தைப்பூச திருவிழா- பழனி விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினர் தீவிர கண்காணிப்பு

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினரை குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகின்ற 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதற்காக தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 18-ம் தேதியும், திருக்கல்யாணம் 19-ம் தேதியும் நடைபெறுகிறது. திருவிழா சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனிடையே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் விடுதி, மண்டப உரிமையாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து விடுதி, லாட்ஜ், மண்டபங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். அங்கு தங்குவோர் குறித்த விபரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பதிவு செய்த விபரங்களை தினமும் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். அடையாள அட்டையை சரிபார்த்து நகல்களை பெறவேண்டும். முழுமையான விலாசம், தொலைபேசி எண்களை பெறவேண்டும். போலி வழிகாட்டிகளை அனுமதிக்கக்கூடாது.

    வெளிநாட்டினர் வரும்போது அவர்களது பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக யாரேனும் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். யாரேனும் நீண்ட நாட்கள் விடுதியில் தங்கியிருந்தாலும் அவர்கள் குறித்த விபரங்களை கண்காணிக்க வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×