search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி - திருப்பூரில் நாளை தொடங்குகிறது

    திருப்பூரில் கண்காட்சி அரங்கை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ.திறந்து வைக்கிறார்.
    திருப்பூர்:

    திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 

    இந்த கண்காட்சி திறப்புவிழா நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கண்காட்சி அரங்கை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல். ஏ.திறந்து வைக்கிறார்.கண்காட்சி மலரை கே. சுப்பராயன் எம்.பி., வெளியிட, கூட்டமைப்பின் மாநில தலைவர் சரவணன் பெற்றுக் கொள்கிறார். சங்க நாள்காட்டி மற்றும் நாள்குறிப்பை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி வெளியிட, சங்க பட்டய தலைவர் சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். 

    கூட்டமைப்பின் மண்டல தலைவர் மோகன கண்ணன், சென்னை கார்த்திகேயன் அசோசியேட்ஸ் கார்த்திகேயன், சங்க உடனடி முன்னாள் தலைவர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இந்த கண்காட்சி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய தாவது:-

    கண்காட்சியில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டி டங்களுக்கு தேவையான சிமெண்டு, கம்பி, எலெக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் பொருட்கள், கதவு ஜன்னல்கள், பெயிண்டிங் பொருட்கள், டைல்ஸ், கிரானைட், எஸ்.எஸ். கைப்பிடிகள், யு.பி.வி.சி. பொருட்கள், மாடுலர் கிச்சன், ரூப்பிங் சீட், ரெடி மிக்ஸ் கான்கிரீட், சூரிய சக்தியில் இயங்கும் பொருட்கள், கட்டிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள் மின் தூக்கிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. 

    கண்காட்சியில் முதல்முறையாக மரபு கட்டுமானம், கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பேவர் பிளாக்குகள், ஆட்டோ மெட்டிக்பவர் பேனல் உள்ளிட்ட புதுமையான நவீன பொருட்கள் தொடர்பான அரங்குகளும் இடம் பெறுகின்றன. அனுமதி இலவசம். 

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    ஏற்பாடுகள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் முரளி, செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் துரைசாமி, துணை தலைவர் ரமேஷ் என்கிற அருண், துணை செயலாளர் பாரதிராஜா, துணை பொருளாளர் கார்த்திக், கண்காட்சி தலைவர் பழனிசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பாரதி, தகவல் தொடர்பாளர் கவுதம், கண்காட்சி மலர் குழு தலைவர் பிரகாஷ் உள்பட கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அடுத்த மாதம் (ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×