என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ராமநாதபுரம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோச மங்கையை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் ரமணி ஜீவா (வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் நான்காம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

  அவருக்கு சிறு வயதில் இருந்து தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவியதன் காரணமாக விடுமுறையில் உக்ரைன் நாட்டில் இருந்து ஊருக்கு வந்தவர், திரும்பி செல்லாமல் ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார்.

  இந்நிலையில் அழகர்சாமியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ரமணி ஜீவா தனியாக இருந்துள்ளார். கணவன்-மனைவி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, ரமணி ஜீவா வீட்டு தொட்டில் கிளாம்பில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

  இதுகுறித்து திருஉத்திர கோசமங்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×