search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    தமிழகத்தில் 551 கோவில்களில் திருப்பணிகள் செய்ய அனுமதி- அமைச்சர் சேகர்பாபு

    வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் 551-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 551-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி நடைபெற இவ்விரு வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிவுற்றவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    மேலும் பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ‘திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்’ என்ற பகுதிக்கு சென்று மாவட்டம் வாரியாக திருக்கோயில்களை தேர்வு செய்து எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×