என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட பெண்ணின் உடலையும், போலீசார் விசாரணை நடத்துவதையும் படத்தில் காணலாம்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் பெண் பிணம் - போலீசார் விசாரணை
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றின் பழைய பாலத்தின் கீழ் இறந்த நிலையில் பெண்ணின் உடல் ஒன்று ஆற்றுநீரில் மிதந்து வந்ததுடன், ஆழமான பகுதியில் உள்ள முட்புதரில் சிக்கியது.
இதையறிந்த தாராபுரம் போலீசார் மற்றும் தாராபுரம் தீயணைப்பு துறையினர் அமராவதி ஆற்றுக்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும்.
அவரது பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ந்தேதி தாராபுரத்தில் சுஜாதா என்ற பெண் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று மற்றொரு பெண் ஆற்றில் பிணமாக கிடந்தது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story