என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலையில் பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்
கட்டணமின்றி வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும்.
மடத்துக்குளம்:
திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில அரசை கண்டித்து உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் விஜயராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் குட்டியப்பன், ஜோதீஸ்வரி கந்தசாமி, நிர்வாகிகள் மௌனகுருசாமி, வடுகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் குருவப்பநாயக்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரித்து மக்களிடம் பெற்ற தொகையை வழங்கவும், கட்டணமின்றி வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும்.
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்களை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story