என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  விசாரணைக்குச் சென்ற 2 பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் - கட்டிட தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே விசாரணைக்குச் சென்ற 2 பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

  மதுரை:

  மதுரை மீனாட்சிபுரத்தில் ஒரு வாலிபர் 2 பெண் போலீசாரை அரிவாளால் வெட்ட பாய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

  இது தொடர்பாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் வடக்கு துணை கமி‌ஷனர் ராஜசேக, செல்லூர் உதவி கமி‌ஷனர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

  இதில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஏட்டு பொன்னுத்தாயி, பெண் போலீஸ் சங்கீதா ஆகியோர் விசாரணைக்கு சென்றபோது கட்டிட தொழிலாளி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பெருமாள் (வயது 40) என்பவர்தான் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார் என தெரிய வந்தது.

  பெருமாளுக்கும் அவரது மனைவி பூமாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக பூமா கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்க சென்றபோது பெருமாள் ஒத்துழைக்கவில்லை. மேலும் அரிவாள்மனையை காட்டி இங்கிருந்து செல்லாவிட்டால் வெட்டிக் கூறு போட்டுவிடுவேன் என்று மிரட்டியதாக போலீஸ் ஏட்டு பொன்னுத்தாய் புகார் கொடுத்துள்ளார்.

  அதன் அடிப்படையில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

  நடத்தி வருகின்றனர்.

  மதுரையில் வழக்கு விசாரணை நடத்துவதற்காக சென்ற 2 பெண் போலீசாரை கொத்தனார் பெருமாள் அரிவாளால் வெட்ட பாய்ந்த வீடியோ வைரல் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×