என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  பறவைகாய்ச்சல் எதிரொலி- கோழிப்பண்ணைகளுக்கு அதிரடி உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கால்நடை டாக்டர் மற்றும் கால்நடை ஆய்வாளர் அடங்கிய இக்குழுவினர் கறிக்கோழி பண்ணைகளில் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.
  உடுமலை:

  கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதையடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பறவைக்காய்ச்சல் நோய்த்தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோய்த்தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுவது மட்டுமின்றி கேரளாவில் இருந்து வரும் பறவையினங்கள் மற்றும் தீவனங்களை கண்டறிந்து திருப்பி அனுப்பப்படுகிறது.

  இதுதவிர திருப்பூர் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு  கோழிப்பண்ணைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  இதில் கால்நடை டாக்டர் மற்றும் கால்நடை ஆய்வாளர் அடங்கிய இக்குழுவினர் கறிக்கோழி பண்ணைகளில் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர். 

  கோழிப்பண்ணைகளில் அதிகப்படியான இறப்புகள் இருந்தால் அதன் உடற்கூறுகள் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 

  அதேநேரம் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிக் குஞ்சுகள், கோழிகள், கோழி முட்டைகள், வாத்துகள், வாத்து முட்டைகள், வாத்துக் குஞ்சுகள், கோழித்தீவனங்கள் போன்றவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  பண்ணையின் நுழைவு வாயிலில் கிடங்கு அமைத்து அதில் ‘குளோரின் டை ஆக்சைடு’ கிருமி நாசினி கலவை கலந்து வைப்பதுடன் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண்ணைக்குள் வரும் வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கோழிப்பண்ணைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  Next Story
  ×