என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புடம்.
அவினாசியில் ரூ.51 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
கொட்டுரக பருத்தி குவிண்டால் ரூ.1,300 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.51.78 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2,065 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் ஆர்.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 7,500 முதல் ரூ. 9,002 வரையிலும், டி.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 9,000 முதல் ரூ.11,900 வரையிலும், கொட்டுரக (மட்ட ரக) பருத்தி குவிண்டால் ரூ.1,300 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது.
ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.51 லட்சத்து 78 ஆயிரம் ஆகும்.
Next Story