என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.55 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெள்ளக்கோவில், முத்தூர், ஊத்துக்குளி சேர்ந்த 17 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
  வெள்ளக்கோவில்:

  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திருச்சி, வில்வாதம்பட்டி, முத்தம்பட்டி, வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 147 விவசாயிகள் தங்களுடைய 1,165 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 60,847 கிலோ ஆகும். 

  இதில் வெள்ளக்கோவில், முத்தூர், ஊத்துக்குளி சேர்ந்த 17 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். தேங்காய் பருப்பு கிலோ ரூ.70 முதல் ரூ.108.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.101.40 ஆகும்.

  ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.54 லட்சத்து 83 ஆயிரத்து 673 ஆகும். இவை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
  Next Story
  ×