search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தண்ணீர் தேங்குவதை தடுக்க உடுமலையில் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

    பழநி ரோடு, கச்சேரி வீதி, தளி ரோடு, நாராயணன் காலனி பகுதிகளில் நூற்றாண்டு சிறப்பு நிதியின் கீழ் புதிதாக மழை நீர் வடிகால் கட்டப்பட்டு வருகின்றன.
    உடுமலை:

    உடுமலை நகரப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக பிரதான ரோடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய பஸ்  நிலையம், பொள்ளாச்சி ரோடு பகுதிகளில், பல அடி உயரத்திற்கு மழை வெள்ளம் ஓடியதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

    அதே போல் பழனி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு பகுதிகளிலும் மழை நீர் வடிய வழியில்லாமல் ரோடுகளை வெள்ளம் ஆக்கிரமித்தது. பிரதான ரோடுகளில் மழை நீர் வெளியேற்றும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. 

    தற்போது அவை கடைகள், கட்டிட உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. பிரதான ரோடுகளின் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதே போல், பழநி ரோடு, கச்சேரி வீதி, தளி ரோடு, நாராயணன் காலனி பகுதிகளில் நூற்றாண்டு சிறப்பு நிதியின் கீழ் புதிதாக மழை நீர் வடிகால் கட்டப்பட்டு வருகின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல் ரோடு மட்டத்திலிருந்து பல அடி உயரத்திற்கு தடுப்பணையாக கட்டப்படுகிறது.

    இதனால் பெய்யும் மழை நீர் முழுவதும் ரோட்டில் ஓடி வருகிறது. முறையான திட்டமிடல், வடிவமைப்பு இல்லாததால் நாராயணன் காலனி பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்  மழை வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நகரின் பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால்களை மீட்டு புதுப்பிக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை தூர்வார வேண்டும்.

    இணைப்பு ரோடுகளில் உள்ள வெள்ள நீர் வடிகால்களை பிரதான வடிகால்கள் மற்றும் ஓடைகளில் இணைக்க வேண்டும். மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×