search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பாரதியார் பள்ளியில் ஆய்வகம் கட்டுமான பணிகள் தீவிரம்

    தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பில் இரு ஆய்வகங்கள் கட்டப்படுகின்றன.
    உடுமலை:

    உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாணவர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

    அதன்படி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, நூலகம், கம்ப்யூட்டர் அறை, அறிவியல் ஆய்வகம், கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு பள்ளிகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

    அதன் ஒரு பகுதியாக, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 2 ஆய்வகங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 

    பள்ளியில் 980 மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவிகள் நலன் கருதி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படுகின்றன.

    தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம்  மதிப்பில் இரு ஆய்வகங்கள் கட்டப்படுகின்றன. விரைந்து பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×