search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வேளாண் எந்திரங்கள் - குறைந்த வாடகையில் வழங்க கோரிக்கை

    டிராக்டருடன் இயக்கப்படும் விதைப்பு எந்திரம், தானியங்கள் பிரிக்கும் எந்திரம் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் விவசாயிகள் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் பந்தல் சாகுபடி முறையிலும் நடவு முதல் அறுவடை வரை விவசாய தொழிலாளர் தேவை அதிகமுள்ளது.

    பல்வேறு காரணங்களால் கிராமங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறித்த நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் சாகுபடியில் பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இப்பிரச்சினையை சமாளிக்க பல்வேறு வேளாண் எந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.

    அவ்வகையில் டிராக்டருடன் இயக்கப்படும் விதைப்பு எந்திரம், தானியங்கள் பிரிக்கும் எந்திரம் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர். தொடர்ச்சியாக காய்கறி சாகுபடி மேற்கொள்பவர்களுக்கு களையெடுத்தல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. 

    இதற்கு தீர்வாக மினி பவர் டிரில்லர், கோனோ வீடர் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் தாங்களாகவே இந்த எந்திரங்களை கொண்டு களையெடுத்தல், குறைந்த பரப்பில் உழவு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்கின்றனர்.

    இதனால் தொழிலாளர் தேவை குறைவதுடன் குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    வேளாண் சாகுபடிக்காக உருவாக்கப்பட்ட சிறிய எந்திரங்கள், தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுகின்றன. சில எந்திரங்களின் விலை அதிகளவு உள்ளதால் அவற்றை சிறு, குறு விவசாயிகள் சொந்தமாக வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. 

    எனவே வேளாண் பொறியியல் துறை வாயிலாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு எந்திரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அக்கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் எந்திரங்களை வழங்கினால் ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.
    Next Story
    ×