search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    1.25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    தமிழக அரசு வாரந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி வரும் நிலையில், வீடு தேடி தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. வாரந்தோறும் மெகா முகாம்களை நடத்தி ஒரு நாளில் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகளை செலுத்தியது. 

    முதல் டோஸ் செலுத்தியவர்களில் ஏராளமானோர் 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்று 8-வது மெகா முகாம் நடத்தப்பட்டது.

    இதற்கிடையில வீடு தேடி தடுப்பூசி  திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 1.26 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. வீடு தேடி தடுப்பூசி திட்டத்தில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×