search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் தடம் புரண்ட வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ரெயில் தடம் புரண்ட வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றம்: சேலம்-தர்மபுரி இடையே மீண்டும் ரெயில்கள் இயக்கம்

    தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையே நேற்று மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
    தர்மபுரி:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகே மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் அந்த ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து மீட்பு பணிகள் மற்றும் ரெயில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன.

    பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லும் பணி, சேதமடைந்த ரெயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி, தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி ஆகியவை நடந்தன. இதனிடையே நேற்று முன்தினம் இரவு தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர் சஞ்சீவ் கிஷோர் ரெயில் தடம்புரண்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது தண்டவாள சீரமைப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    தண்டவாளத்தில் சேதமடைந்த ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு புதிய ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் நள்ளிரவில் பொதுமேலாளர் மேற்பார்வையில் அந்த பகுதியில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் சேலம்- தர்மபுரி இடையே மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த மலைப்பாதையில் குறைந்தபட்சம் 30 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். விபத்து நடந்ததன் காரணமாக இந்த பகுதியில் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரெயில்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று 2-வது நாளாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
    Next Story
    ×