search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றும் பணி
    X
    சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றும் பணி

    சென்னையில் போக்குவரத்து மாற்றம், போக்குவரத்து தடை குறித்த முழு விவரம்...

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின்  தற்போதைய  (மாலை 6 மணி) நிலவரம்.

    மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-

    வியாசர்பாடி சுரங்கபாதை, கணேஷபுரம் சுரங்கபாதை, அஜாக்ஸ் சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, பழவந்தாங்கல் சுரங்கபாதை, தாம்பரம் சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, காக்கன் சுரங்கபாதை ( இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ)

    மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது,

    கே,கே நகர்  - ராஜ மன்னார் சாலை

    மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை

    செம்பியம் - ஜவஹர் நகர் 

    பெரவள்ளுர் - 70 அடி சாலை

    புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு

    வியாசர்பாடி - முல்லை நகர் பாலம் 

    பள்ளிக்கரனை 200 - அடி சாலை  காமாட்சி மருத்துவமனை  முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள் மட்டும் செல்கிறது).

    சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி.

    சாலையில் குளம்போல் காட்சி அளிக்கும் வெள்ளம்

    மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:-

    மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வழியாக புழல் கால்வாயை அடைவதால்  எம்.ஆர்.எச் சாலையில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம்சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரேபக்கத்தின் வழியாக செல்கின்றது.

    குமணன்சாவடி குன்றத்தூர் ரோடு ஒருபுறம் மூடப்பட்டுள்ளது.

    வடபழனி முதல் கோயம்போடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. 

    மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும் இலகு ரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்ட் மேரிஸ் சாலை வழியாக அனுப்பப்படுகிறது.

    சாலையில் பள்ளம்:-

    திருமலைப்பிள்ளைரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்- பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

    மாநகர  பேருந்து  போக்குவரத்து  மாற்றம்:-

    பெரம்பூர் பேரக்ஸ் சாலை– அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப்பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரபேருந்துகள் பிரிக்கிளின்ரோடு, ஸ்டிராஹன் ஸ்ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்கிளின்ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும். 

    மரங்கள் விழுந்து அகற்றும் பணி 

    புதுவண்ணாரப்பேட்டை கேப்டன் மகால் அருகில் - 1 மரம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×