search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    இரணியல் அருகே டெம்போ டிரைவருக்கு கத்திக்குத்து

    இரணியல் அருகே டெம்போ டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெமான்ஸ் (வயது 25). இவர் அப்பகுதியில் வாடகை டெம்போ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பெமான்சுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் பெமான்சை சரமாரியாக குத்தினார். இதில் பெமான்சுக்கு வயிறு, கழுத்து உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×