என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  ஓட்டல், பெட்டிக்கடைகளில் மதுவிற்றதாக 3 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓட்டல், பெட்டிக்கடைகளில் மதுவிற்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நொய்யல்:

  நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் வேலாயுதம்பாளையம் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அதியமான் கோட்டையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் மது விற்றது தெரிய வந்தது.

  இதையடுத்து, புகளூர் அன்னை நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 44), பெட்டிக்கடைகளில் மது விற்றதாக புகளூர் டி.என்.பி.எல். ரோடு பகுதியை சேர்ந்த மணி (57), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சிறுகினத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (26) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×