search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

    உடுமலை பழனி ஆண்டவர்நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    நிகழ்ச்சியில் இரண்டாம் கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம், சாமிக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ஆண்டவர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம் ,மங்கள இசை ,நவகிரக கவசம், காப்பு கட்டுதல் ,லட்சுமி பூஜை, பூர்ணாகுதி ,மகா தீபாராதனை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மங்கள விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மண்ணெடுத்தல், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம் , முதல்கால யாகபூஜை ,வேதிகா அர்ச்சனை, மூலிகை பொருள்கள் ,பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் இரண்டாம் கால யாகபூஜை , மூலமந்திர ஹோமம், சாமிக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், உயிர் ஓட்டுதல், பூர்ணாகுதி, தீபாராதனை, தொடர்ந்து கலச புறப்பாடு , கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. 

    தொடர்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் ,தீபாராதனை, கோதரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.  

    சர்வசாதகம் அருள் சுடர் கிரிவாச பகவதி குருக்கள், பிரசன்ன விநாயகர் கோவில்அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள், அய்யப்பன் சுவாமி கோவில் அர்ச்சகர் அருள் மாணிக்கம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஈஸ்வரன், குணசேகரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
    Next Story
    ×