search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருக்கிறது -ப.சிதம்பரம்
    X

    இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருக்கிறது -ப.சிதம்பரம்

    உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பணவீக்கம் அதிகரித்திருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
    சென்னை:

    சென்னையில் இன்று தமிழ்நாடு வர்த்தக சபை சார்பில் டாக்டர் ஆர்.கே. சண்முகம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு இந்திய பொருளாதாரம்- நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார்.

    அப்போது, உலக பொருளாதாரத்தில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது; பணவீக்கம் அதிகரித்திருக்கிறது; 40 சதவீதம் பேர் வேலையிழந்துள்ளனர் என்றார். 

    இந்திய பொருளாதாரம் அபாய நிலையில் இருக்கிறது, முதலீடு குறைந்துவிட்டது. அரசின் கொள்கை என்ற பெயரில் குறுக்கீடுகள்தான் அதிகமே தவிர பயனில்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    Next Story
    ×