search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் ரத்தினலிங்கேஸ்வரர் - நந்திபகவான்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் ரத்தினலிங்கேஸ்வரர் - நந்திபகவான்.

    உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    சிவன் பாடல்களை பாடியவாறு பெண்கள் கோவில் முழுவதும் சுற்றி வந்து வழிபட்டனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தில்லைநகரில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த  ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சோமவார ஐப்பசி முதல் நாள் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    இதில் ரத்தினலிங்கேஸ்வரருக்கு பலவகை அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நந்தி பகவானுக்கும் சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் உற்சவ மூர்த்திகளான ரத்தினலிங்கேஸ்வரர், ரத்தினாம்பிகை சப்பரத்தில் வைத்து கோவில் சுற்றுப்பகுதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர். 

    மேலும் சிவன் பாடல்களை பாடியவாறு பெண்கள் கோவில் முழுவதும் சுற்றி வந்தனர். ஐப்பசி முதல் நாள் சோமவாரப்பிரதோஷம் என்பதால் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நந்தி பகவானை வழிபட்டனர். 

    தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் போடிபட்டி சூர்யா கார்டன் காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×