search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகனங்கள் பறிமுதல்
    X
    வாகனங்கள் பறிமுதல்

    நாமக்கல் மாவட்டத்தில் ஆவணமின்றி இயங்கிய 21 வாகனங்கள் பறிமுதல்

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் பகுதி அலுவலகங்களான ராசிபுரம், பரமத்திவேலுார் ஆகிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாகன தணிக்கை நடந்தது.

    இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி ஆகியோர் ஈடுபட்டனர்.

    இதில் 4,410 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 903 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 167 வரி மற்றும் அபராதம் வசூல் செய்யப்பட்டது. அதேபோல் 638 வாகனங்களுக்கு ரூ.45 லட்சத்து 67 ஆயிரத்து 400 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது. தணிக்கையின் போது போதிய ஆணவங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அகில இந்திய அளவில் அனுதி பெற்ற சுற்றுலா வாகனங்களை தமிழக வரி செலுத்தாமல் இயக்கியதற்காக, வரியாக ரூ.90 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வரி செலுத்தாமல் இயக்கினால், வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, உரிய அபராதம் வசூலிக்கப்படும். மேலும் லாரி தொழிலில் ஈடுபடுவோர், பள்ளி செல்லும் குழந்தைகளை பணிக்கு அமர்த்தக்கூடாது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×