search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னத்தூர் பஸ் நிலையத்தில் அத்திக்கடவு திட்டப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    குன்னத்தூர் பஸ் நிலையத்தில் அத்திக்கடவு திட்டப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

    குன்னத்தூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் அவிநாசி - அத்திக்கடவு திட்டப்பணி

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் ரோட்டில் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் பெருந்துறை ரோடு, சந்தைப்பேட்டை, மலையபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் அவிநாசி - அத்திக்கடவு திட்ட பணி நடைபெற்று வருகிறது. ‌

    கடந்த ஒரு மாதமாக பஸ்நிலையத்தில் அத்திக்கடவு திட்டத்திற்கு குழி தோண்டி ராட்சச குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் அங்கு கான்கிரீட் திட்டு கட்டி பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. 

    இவர்கள் வேலை செய்யும் இடம் பஸ் நிலையத்தில் 4 ரோடு சந்திக்கும் பகுதி என்பதால் அப்பகுதியில் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 

    மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் ரோட்டில் அணிவகுத்து நிற்கும்  நிலை உள்ளது. இந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வண்டிகள் வந்தால் அவர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

    ஆகவே அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒப்பந்ததாரர்கள் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணியை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டுமாறு  அப்பகுதி வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.  
    Next Story
    ×