search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் தேசிய அஞ்சல் வார விழா-11ந்தேதி முதல் நடக்கிறது

    பொதுமக்கள் புதிய சேமிப்பு கணக்குகள், காப்பீட்டு பாலிசி, புதிய ஆதார் அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் வார விழா நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திருப்பூர்: 

    திருப்பூரில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா வருகிற 11-ந்தேதி  முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கலைச்செல்வி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல் துறை சார்பில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம் வருகிற 11-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள அஞ்சலகங்களில் 11-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் தேசிய அஞ்சல் வாரவிழா கொண்டாடப்படுகிறது.

    இதன்படி 11-ந்தேதி சேமிப்பு நாள், 12-ந்தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு, 13-ந்தேதி தபால் தலை சேகரிப்பு, ஆதார் அட்டை திருத்தம், 16-ந் தேதி வணிக தினம், தபால் தினம் ஆகியவை தேசிய அஞ்சல் வார விழாவில் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் புதிய சேமிப்பு கணக்குகள், காப்பீட்டு பாலிசி, புதிய ஆதார் அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
    Next Story
    ×