search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தரமற்ற விதைகளால் நஷ்டம் - போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

    காய்ப்புத் திறனுக்கு வராமல் ஏக்கருக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    குடிமங்கலம்:

    உடுமலை அருகே குடிமங்கலம், வரதராஜபுரம், கோட்டமங்கலம் சுற்றுப்பகுதி விவசாயிகள் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து செடி முருங்கை விதை வாங்கி நடவு செய்துள்ளனர். 

    இந்தநிலையில் தரமற்ற விதைகளால் செடிகள் குறித்த நேரத்தில் காய்ப்புத் திறனுக்கு வராமல் ஏக்கருக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் குடிமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக தரமற்ற விதைகள் வினியோகிக்கப்பட்டது குறித்து முழுமையான விசாரணை செய்ய வேண்டும். 

    பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தீர்வு கிடைக்காவிட்டால் வேளாண் பல்கலைக்கழகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    Next Story
    ×