search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
    X
    வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

    உடுமலை நாராயணகவி பிறந்தநாள் பேச்சுபோட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    உடுமலை நாராயணகவியின் பேரன் வக்கீல் சுந்தர்ராஜன், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, உலக எழுத்தறிவு தினம், பேரறிஞர் அண்ணா, பெரியார், உடுமலை நாராயணகவி ஆகியோர் பிறந்த தின விழாவையொட்டி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் இணையவழி பேச்சுப் போட்டி நூலக வாசகர் வட்டம் மற்றும் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 112 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

    அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் உடுமலை நாராயணகவி பிறந்த தினத்தன்று நூலகத்தில் நடந்தது. நூலகர் கணேசன் தலைமை வகித்தார். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    இதில் உடுமலை நாராயணகவியின் பேரன் வக்கீல் சுந்தர்ராஜன், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக உடுமலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி முருகன் கலந்து கொண்டார்.

    மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராகல்பாவி, ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோருக்கு நாராயண கவிராயர் பேரன் வக்கீல் சுந்தர்ராஜன் மற்றும் நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் செல்வராஜ் ஆகியோர் நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தகம் பரிசு அளித்தனர். 

    போட்டிகளில் கோட்டமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜி வி .ஜி. கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார். 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்டத்தினர், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ் செல்வராஜ் மற்றும் நூலகர்கள் பிரமோத், அஸ்ரப், சித்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×