search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பூசணிக்காய் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி

    பிற மாவட்ட தேவை குறைவாக இருப்பதால் பூசணிக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது.
    உடுமலை:

    உடுமலை தாந்தோனி, மலையாண்டிபட்டினம், மலையாண்டி கவுண்டனூர், குட்டிய கவுண்டனூர், எலையமுத்தூர் பகுதிகளில் பரவலாக பூசணி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    பொங்கல் விழாவின் போது அறுவடை செய்யும் வகையில் பூசணி சாகுபடியை விவசாயிகள் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கிணற்றுப்பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து குறைந்த தண்ணீர் தேவையில் சாகுபடியை அனைத்து சீசன்களிலும் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

    பிற மாவட்ட தேவை குறைவாக இருப்பதால் பூசணிக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் கொல்கத்தா உட்பட்ட  பிற மாநில நகரங்களில் பூசணிக்கு தேவை அதிகம் இருப்பது தெரியவந்தது. 

    அதற்கேற்ப வியாபாரிகளும் பிற மாநிலங்களுக்கு பூசணியை விற்பனைக்கு அனுப்பியதால் ஓரளவு விலை கிடைத்தது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பிற மாநிலங்களுக்கு பூசணிக்காய் போதியளவு விற்பனைக்கு அனுப்பப்படவில்லை.

    தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் கொல்கத்தாவுக்கு உடுமலையில் இருந்து லாரி வாயிலாக விற்பனைக்கு அனுப்ப தொடங்கியுள்ளனர்.  

    விவசாயிகள் கூறுகையில்:

    பூசணிக்காய்களை அதிக நாட்கள் இருப்பு வைக்கலாம் என்பதால் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.கடந்த சீசனில் போதிய விலை கிடைக்கவில்லை. பிற மாநிலங்களில் விற்பனை சீராகி உள்ளதால் வரும் சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
    Next Story
    ×