search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி முத்திரை வழக்கில் வக்கீல் கைது

    சாலை விபத்துக்கள், கிரிமினல் வழக்குகள், திருட்டு சம்பவ வழக்குகள்,குடும்ப பிரச்சினைகள் என பல்வேறு வகையான வழக்குகளை கையில் எடுத்து அவர்களுக்கு ராஜேந்திரன் நிவாரணம் பெற்று கொடுத்துள்ளார்.
    தாராபுரம்;

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவர் வெள்ளகோவில் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது தாராபுரம், காங்கேயம் ,வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துக்கள், கிரிமினல் வழக்குகள், திருட்டு சம்பவ வழக்குகள்,குடும்ப பிரச்சினைகள் என பல்வேறு வகையான வழக்குகளை கையில் எடுத்து அவர்களுக்கு நிவாரணம் பெற்று கொடுத்துள்ளார். அதன் விளைவாக அவருக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுமார் 31 வழக்குகளில் 75 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக வழக்கறிஞர் ராஜேந்திரன் மீது தாராபுரம் நடுவர்மன்ற சார்பு நீதிபதி தர்மபிரபு தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். 

    புகாரை பெற்றுக் கொண்ட தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  
    Next Story
    ×