என் மலர்

  செய்திகள்

  அபராதம்
  X
  அபராதம்

  மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.7.25 லட்சம் அபராதம் வசூல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தெரிய வந்தால் அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரின் 9443037508 என்ற செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
  மதுரை:

  மதுரை மண்டல மின் வாரிய அமலாக்கப்பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  மதுரை மண்டல மின் வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரையில் சோதனை நடத்தினர்.

  இதில் காரியாபட்டி, திருச்சுழி, பந்தல்குடி, திருமங்கலம் உள்ளிட்ட 18 இடங்களில் மின் திருட்டு நடந்தது கண்டறியப்பட்டது.

  இதையடுத்து மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 76 ஆயிரத்து 957 அபராதம் வசூலிக்கப்பட்டது.

  மின் திருட்டில் ஈடுபட்ட சிலர் ரூ. 48 ஆயிரம் அபராத தொகையை தாங்களாகவே செலுத்த முன்வந்தனர். எனவே அவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை கைவிடப்பட்டது.

  மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 7.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

  மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தெரிய வந்தால் அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளரின் 9443037508 என்ற செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×