search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மயிலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    மயிலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் மகேந்திரன் (வயது 39). ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலம், பாதிராப்புலியூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக மகேந்திரனை மயிலம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×