search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மர்ம மரணத்தில் திருப்பம்: தொழிலாளியை அடித்து கொன்ற தம்பி கைது

    வீட்டு பொருட்களை விற்று மது குடித்ததால் தொழிலாளியை அடித்து கொன்ற தம்பியை போலீசார் தம்பியை கைது செய்தனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 59). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு ஜீவரத்தினம் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் அவரது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து பாலசுப்பிரமணி மட்டும் தனியாக வசித்து வந்தார். இருந்தாலும் பாலசுப்பிரமணிக்கு அவரது மகன், மகள்கள் சாப்பாடு கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி மகன் தந்தைக்கு சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது அங்கு பாலசுப்பிரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது கை, காலில் காயம் இருந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கை, கால்களில் காயம் இருந்ததால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கும், அவரது சகோதரர் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது தெரிய வரவே சகோதரரை போலீசார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இவர் தலைமறைவாகியது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை இவரே கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்று சந்தேகித்தனர். தொடர்ந்து அவரை தேடினர்.

    இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அவரை இன்று அதிகாலை வடவள்ளி போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணகுமார், தனது அண்ண னை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    பாலசுப்பிரமணி குடித்து விட்டு வருவதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனா ல் வடவள்ளியில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு வந்து தனது சகோதரர் வீட்டிற்கு சென்று தம்பி மற்றும் அவரது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    தொடர்ந்து அண்ணனின் தொந்தரவு அதிகரிக்கவே கிருஷ்ணகுமாரை வீட்டை காலி செய்து விட்டு லாலி ரோடு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    வீடு மாறி சென்றபோது குடிநீர் மோட்டார் மற்றும் டிரம் உள்பட சில பொருட்களை இங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை பாலசுப்பிரமணி எடுத்து சென்று விற்று மதுகுடித்துள்ளார். இது தெரிந்தது கிருஷ்ணகுமார் தனது சகோதரரை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து வீட்டு பொருட்கள் எடுத்து விற்று மது குடித்து வந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் தனது மகளுக்கு திருமணம் நடத்தியுள்ளார்.

    அப்போதும் மண்டபத் திற்கு குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணி அங்கும் தகராறில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து அண்ணன் குடித்து விட்டு தகராறு செய்வது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று கிருஷ்ண குமார், தனது உறவினரான ஜவஹர் பிரகாசுடன் அண்ணன் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றார்.

    அங்கு சென்றதும் இது சம்பந்தமாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த கிருஷ்ணகுமார் அங்கிருந்த கட்டையை எடுத்து பாலசுப்பிரமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    Next Story
    ×