search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி சர்க்கரை ஆலை.
    X
    அமராவதி சர்க்கரை ஆலை.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022ம் ஆண்டு அரவைக்கு இதுவரை 2,320 ஏக்கர் கரும்பு பதிவு

    தொடர்ந்து இரண்டரை மாதம் அரவை நடந்த நிலையில் 63,560 டன் கரும்பு அரவை செய்து 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம்.கடந்த 2020ம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட கரும்பை அடிப்படையாக கொண்டு நடப்பு 2021ம் ஆண்டு கரும்பு அரவை நடந்தது.
     
    தொடர்ந்து இரண்டரை மாதம் அரவை நடந்த நிலையில் 63,560 டன் கரும்பு அரவை செய்து 7.88 சதவீதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49,945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக தற்போது  கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை  1,370 ஏக்கர் கன்னி கரும்பும், 950 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 2,320 ஏக்கர் பரப்புள்ள கரும்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×