search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை.
    X
    உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை.

    உடுமலையில் ஆபத்தான சாக்கடை குழாய்களால் விபத்து அபாயம்

    இங்கு ரூ.56.07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு ரூ.56.07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டது. 

    இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் இத்திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்ததில் குளறுபடி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் கிடக்கிறது. நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து ஆபத்தான முறையில் உள்ளவற்றை புதுப்பிக்கவும், சாலை மட்டத்திற்கு மேல் உள்ள மேனுவல்களை சரிசெய்யவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×