என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர் மின் உற்பத்தி தீவிரம்
Byமாலை மலர்11 Sep 2021 8:43 AM GMT (Updated: 11 Sep 2021 8:43 AM GMT)
திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 6-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகளை ஆதாரமாகக்கொண்டு மின் உற்பத்தி மேற்கொள்ளும் சிறு புனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் 4 மெகாவாட் திறனுள்ள எந்திரங்கள் வாயிலாக உற்பத்தியாகும் மின்சாரம் அமராவதி நகர், கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம் வழியாக மின் வினியோகத்திற்கு செல்கிறது.
அதேபோல் திருமூர்த்தி அணையில் 2 மெகாவாட் திறனுள்ள எந்திரங்கள் வழியாக உற்பத்தியாகும் மின்சாரம் திருமூர்த்திநகர், தளி பீடர் வழியாக பூலாங்கிணர் துணை மின் நிலையத்திற்கு வருகிறது. அமராவதி அணையில் இருந்து மே மாதம்16-ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இரு மாதமாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 6&ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் இரு சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக மின் உற்பத்தி நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவ மழையால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் திருப்தியான நீர் இருப்பு உள்ளதோடு உபரியாகவும், பாசனத்திற்கும் தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நீர் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒரு மெகாவாட் திறனுள்ள எந்திரம் வாயிலாக சராசரியாக மணிக்கு 1,600 யூனிட் என நாள் ஒன்றுக்கு 96 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அணைகளில் நீர் வெளியேற்றத்தை பொருத்து சிறு புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி உள்ளது என்றனர்.
Next Story
×