search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கள்ளக்குறிச்சியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை செயலாளர் தனிஸ்லாஸ், துணைத்தலைவர்கள் ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலைப்பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் இணைச் செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் உத்திரகுமார், ரோடு ரோலர் எந்திர டிரைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், வேல்முருகன், கள்ளக்குறிச்சி உட்கோட்ட தலைவர் செல்வம், சங்கராபுரம் தலைவர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.
    Next Story
    ×