search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வறண்டு கிடக்கும் சேவூர் குளம் - நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

    இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் சேவூர் குளம் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள்-பொதுமக்கள் உள்ளனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரில் 150 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்குகிறது. இரண்டு ஆண்டுக்கு முன் இத்தருணத்தில் இக்குளம் நிரம்பியது. 

    அங்குள்ள மற்றொரு நீராதாரமான கிளாகுளமும் நிரம்பியது. இந்தாண்டு சேவூரில் எதிர்பார்த்த மழை இல்லாததால் குளம் வறண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தை நோக்கி செல்கிறது.  

    ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்தி நிலத்தடி நீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. 

    இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் சேவூர் குளம் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள்-பொதுமக்கள் உள்ளனர்.
    Next Story
    ×