என் மலர்

  செய்திகள்

  கைதான வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ்
  X
  கைதான வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ்

  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மகளிர் கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
  கோவை:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது.

  இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோர் கைதாகினர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

  இதற்கிடையே இந்த வழக்கில் சிறையில் உள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டார்.

  இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

  சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மகளிர் கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர். அதில் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு, அருண்குமார் ஆகிய 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


  Next Story
  ×