search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசியில் நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றிய பொதுமக்கள்

    அவினாசி பகுதியில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து மான்கள் வெளியேறி வருகின்றன.
    அவினாசி:

    அவினாசி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் சுமார் 3 வயதான பெண்மான் ஒன்று வேகமாக ஓடி வந்தது.

    அதனை பார்த்த தெருநாய்கள் மானை துரத்தின. இதனால் அப்பகுதியில் உள்ள உள்விளையாட்டு அரங்கிற்குள் மான் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் மானை சுற்றிவளைத்து பிடித்து கட்டிவைத்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    திருப்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானை மீட்டு சென்றனர். அவினாசி பகுதியில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து மான்கள் வெளியேறி வருகின்றன. அதில் சில மான்கள் நாய்களிடம் சிக்கி பலியாகும் நிலையும் ஏற்படுகிறது.  

    2 நாட்களுக்கு முன்பு நாய்களிடம் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டனர். தற்போது மீண்டும் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளது. எனவே மான்கள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×