search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    23-ந் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

    திங்கட்கிழமை தோறும் குறைகேட்பு நாளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெறும்.
    திருப்பூர்:

    தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

    திங்கட்கிழமை தோறும் குறைகேட்பு நாளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெறும். வரும் 23-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    மேலும் கலெக்டருக்கு இ-மெயில் மூலம் collrtup@nic.in என்ற முகவரியிலும், வாட்ஸ் ஆப் மூலம் 97000 41114 என்ற எண்ணிலும், 0421 296 9999 என்ற தொலை பேசி எண்ணிலும் குறைகள் தெரிவிக்கலாம். 

    இந்த குறை கேட்பு வாரம் தோறும் திங்கட்கிழமை காலை 10:30 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். கலெக்டர் ஆபீசில் மனு பெறப்படாது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 23-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெறப்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×