search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குமரலிங்கம் பகுதியில் புதர்மண்டி கிடக்கும் நீர்வழித்தடங்கள்

    ஓடையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும்.
    திருப்பூர்:

    நீர்வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் வருங்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறைக்கு நம்மை இட்டுச்செல்லும் அபாயம் உள்ளது.

    எனவே ஒவ்வொரு பருவமழை காலத்துக்கு முன்பும் நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களை தூர் வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

    அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியிலுள்ள மழைநீர் ஓடை தற்போது புதர்கள் மண்டி இருக்கும் இடம் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

    அத்துடன் இந்த ஓடையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும். மேலும் பெருமளவு தண்ணீர் வீணாவதுடன் சில நேரங்களில் அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

    எனவே இந்த பகுதியிலுள்ள மழைநீர் ஓடைகள் மற்றும் சாலையோர நீர்வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×